கிசான் கிரெடிட் கார்டு

கிசான் கிரெடிட் கார்டு (கே.சி.சி) , அதிக வட்டி கடன் வட்டத்தில் இருந்து வெளியேவரவும் சாகுபடி செயல்முறை முழுவதும் மலிவான கடன்களை எளிதாகப் பெறவும் விவசாயிகளுக்கு உதவுகின்ற நிதி வழிமுறையாகும். விதை செலவு முதல் சந்தைப்படுத்தல் செலவு வரை, பராமரிப்பு முதல் கிடங்கு செலவு வரை. பல்வேறு நோக்கங்களுக்காக பணத்தை விரைவில் பெறுவதற்கு கே.சி.சி, விவசாயிகளுக்கு உதவுகிறது மற்றும் கடனை திருப்பிச் செலுத்துவதில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கிறது. விவசாயம் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்த அவர்களை அனுமதிக்கிறது.

கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதன் நன்மைகள்
 1. வசதியான வங்கி சேவைகளின் தொடர்ச்சியான அணுகல், குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் கே.சி.சி உடன் தொடர்புடைய பிற சலுகைகள்

  1. குறைவான பிரீமியத்தில் விரிவான காப்பீட்டு பாதுகாப்பு

  2. இயற்கை பேரழிவு காரணமாக பயிர் இழப்பு நேர்ந்தால் நிதி உதவி

 1. உங்கள் க்ரெடிட் ஸ்கோரை மேம்படுத்துகிறது.

  1. சிறந்த கடன் தகுதியின் அடையாளம்

  2. அடுத்த முறை அதிக கடன் தொகைக்கு உங்களை தகுதியுடையவராக்குகிறது.

  3. எதிர்காலத்தில் குறைந்த வட்டி விகிதங்களுக்கு உங்களை தகுதியுடையவராக்குகிறது

 1. Iஅரசிடமிருந்து கூடுதல் மானியங்கள் மற்றும் திட்டங்களுக்கான உங்கள் தகுதி வாய்ப்புகளை மேம்படுத்துகிறது.

கே.சி.சி நிலுவைத் தொகையின் தவணை தவறுதலின் தாக்கம்

வங்கி உறவுக்கு அச்சுறுத்தல்

ஒவ்வொரு ஆண்டும் கே.சி.சி நிலை மதிப்பாய்வு செய்யப்படுகிறது. ஒழுங்கற்ற திருப்பிச்செலுத்தல், இந்த வசதி நிறுத்தப்படுவதற்கான அதிக வாய்ப்பைக் குறிக்கிறது.

வட்டி கட்டணம்

தொகையை திருப்பிச்செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால் அபராத வட்டி கட்டணங்கள் விதிக்கப்படும். இது கடன் ஒழுங்குமுறை நேரத்தில், திருப்பிச்செலுத்த தாமதமான தொகையின் மீது மாதத்திற்கு 2% வரை இருக்கலாம்.

கடன் மதிப்பெண்ணில் எதிர்மறையான தாக்கம்

தொகையை திருப்பிச்செலுத்தாமல் இருப்பது,உங்கள் கடன் வரலாற்றில் க்ரெடிட் ஸ்கோரை குறைக்கிறது மற்றும் எதிர்காலத்தில் கடன் பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். கிடைக்கும் எந்தவொரு கடனும் இயல்பை விட அதிக வட்டிவிகிதத்தில் இருக்கும்.

கே.சி.சி.யின் நன்மைகளைத் தொடர்ந்து பெறுவதற்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துமாறு கிரெடிட் மானிட்டர் அறிவுறுத்துகிறது.