ஆட்டோ கடனில் இயல்புநிலையைத் தவிர்க்கவும்

Avoid Default On Auto Loan

வாகன கடன் என்றால் என்ன?

வாகன கடன் என்பது ஒரு மோட்டார் வாகனத்தை
வாங்குவதற்கு ஒருவர் எடுக்கும் கடன். வாங்கிய
வாகனத்தின் மதிப்பின் அடிப்படையில் இந்த கடன்கள் ,
தவணைகளாக கட்டமைக்கப்படுகின்றன.

ஈட்டுக்கடன் என்றால் என்ன?

வாகன கடன் என்பது ஒரு வகை ஈட்டுக் கடனாகும். இங்கு
கடன் வாங்குபவர் ஒரு மதிப்புமிக்க பொருளை அடமானம்
வைக்க வேண்டும். கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிச்
செலுத்த முடியாமல் போகும்போது இந்த மதிப்புமிக்க
பொருள் கடன் வழங்கியவருக்கு சொந்தமாகிவிடும். வாகன
கடன்களைப் பொறுத்தவரையில், அடமானத்தில் உள்ள
பொருள் வாகனமே.

ஈட்டுக்கடன்கள் ஆபத்தானதா?

பிணையம் காரணமாக, ஈட்டில்லா கடன்களைக் காட்டிலும்
ஈட்டுக்கடன்கள் ஒப்பீட்டளவில் குறைவான இடர்களை
கொண்டுள்ளன. முக்கியமாக ஈட்டில்லா கடன்களுடன்
ஒப்பிடும்போது இந்த கடன்கள் குறைந்த வட்டி
விகிதங்களைக் கொண்டுள்ளன. இருப்பினும், கடனை
அனுமதிப்பதற்கு முன்பு கடன் வாங்குபவரின் கடன் மதிப்பு
அவர்களின் க்ரெடிட் ஸ்கோர் மூலம் மதிப்பிடப்படுகிறது.

கடன் தவணை தவறலின் விளைவுகள்

  • தாமத பேய்மெண்டுக்கான கட்டணம் மற்றும் அபராதங்கள் –
    உங்கள் ஈ.எம்.ஐ செலுத்துவதில் நீங்கள் தாமதமாக இருந்தால், லேட் பேய்மெண்ட் கட்டணம் விதிக்கப்படும்.
    சில சந்தர்ப்பங்களில் அபராதம் காரணமாக வட்டி தொகை
    அதிகரிக்கப்படலாம். இருந்தால், லேட் பேய்மெண்ட் கட்டணம் விதிக்கப்படும்.
    சில சந்தர்ப்பங்களில் அபராதம் காரணமாக வட்டி தொகை
    அதிகரிக்கப்படலாம்.
  • கடன் வசூலுக்கு செல்கிறது – கடன் வழங்குபவர் பொதுவாக
    30 நாட்களுக்கு காத்திருப்பார். அந்த நேரத்தில் அவர்கள்
    உங்களை தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள்
    போன்றவற்றின் மூலம் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள்.
    எந்தவொரு பதிலும் கிடைக்காதபோது,
  • கிரெடிட் ஸ்கோரில் வீழ்ச்சி – கடனைத் திருப்பிச்
    செலுத்தாமல் இருப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை
    கடுமையாக பாதிக்கும், இது கடன் வாங்குவதற்கான உங்கள்
    நம்பகத்தன்மையை குறைத்து , கடன்கள் அல்லது பிற
    வரவுகளுக்கு உங்களை தகுதியற்றவராக்குகிறது.

ஈட்டுக் கடனை திருப்பிச் செலுத்த தவறினால் உண்டாகும்
விளைவுகள்

  • பிணையை மறுசொந்தமாக்கல் – ஈட்டுக்கடனில் கடன்
    வாங்குபவர் கடனை திருப்பிச்செலுத்தவில்லை என்றால்,
    உங்கள் ஒப்பந்தத்தின்படி கடன் வழங்குநருக்கு அதன்
    பிணையை வைத்திருக்க உரிமை உண்டு. ஒரு கார்
    அல்லது இரு சக்கர வாகனத்தில் கடனைத் திருப்பிச்
    செலுத்தத் தவறினால், கடன் வழங்குபவர் உங்கள்
    வாகனத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பு, உங்கள் நிலுவைத்
    தொகையை தீர்க்க 7-15 நாட்கள் அறிவிப்பு காலம்
    கிடைக்கும்.
  • உங்கள் அடமானத்தை ஏலம் / மறுவிற்பனை செய்தல் –
    பிணையின் மறுசொந்தமாக்கலுக்குப் பிறகு வங்கி / கடன்
    வழங்குபவருக்கு, மறுவிற்பனை செய்ய அல்லது ஏலம்
    விட உரிமை உண்டு. வாகனத்தின் விற்பனை தொகை,
    கடன் தொகையை விட அதிகமாக இருந்தால் கடன்
    வாங்கியவருக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு,
    மீதித்தொகை அவருக்கு அளிக்கப்படும். இருசக்கர
    வாகனம் அல்லது காரைப் பொறுத்தவரையில், கடன்
    வழங்குபவர் நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்கு 7
    நாட்கள் கால அவகாசம் அளிக்கிறார், அதன் பிறகு
    வாகனம் ,90 நாட்களுக்குள் விற்பனைக்கு
    வைக்கப்படுகிறது.

கடன் தவணை தவறலை தவிர்க்க உதவிக்குறிப்புகள்.

  • ஒரு பட்ஜெட்டைத் தயாரிக்கவும்- ஒரு பட்ஜெட்டைத்
    தயாரிப்பது மற்றும் உங்கள் செலவுகளைக்
    கண்காணிப்பது உங்கள் மாதாந்திர சமன் தவணைகளை
    (EMI) தவறாமல் செலுத்த உதவும்.
  • நெருக்கடி நிதியை உருவாக்குங்கள்: அவசரகால
    சூழ்நிலைகளுக்காக தொடர்ந்து பணத்தை ஒரு
    இருப்புக்குள் வைக்கவும். இந்த இருப்பு உங்கள்
    ஈ.எம்.ஐ.களை செலுத்துவதற்கும், உங்கள் கிரெடிட்
    ஸ்கோரை பராமரிக்கவும் உதவும்.
  • உங்கள் சொத்தை மதிப்பிடுங்கள்: உங்கள் கடனை
    திருப்பிச் செலுத்த முடியாது என்று நீங்கள் நம்பினால்,
    உங்கள் நிலைமையை மதிப்பிடுவது மற்றும் உங்கள் சொத்தை விற்பது நல்லது. இதன் மூலம் நீங்கள்
    உங்கள் EMI ஐ செலுத்தமுடியும்.
  • உங்கள் கடன் வழங்குநருடன் பேச்சுவார்த்தை
    நடத்துங்கள்: உங்கள் கடனை நீங்கள் செலுத்த முடியாத
    சூழ்நிலையில், உங்கள் கடன் வழங்குநருடன்
    பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்த வழி. கடனளிப்பவர்,
    வாகனத்தை விட உங்கள் கடன் தொகையை திரும்ப
    பெறுவதையே விரும்புவார்.